வல்கம்முல்லவில் வீ்தியில் விபத்து, 2 பேர் பலி


கிரிந்திவெல, வல்கம்முல்ல வீ்தியில் இன்று மாலை {01-08-2017} இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
லொறியொன்றும் ஸ்கூட்டர் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே உயிரிழந்துள்ளனர். லொறியின் சாரதி ஓகொடபொல பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நிட்டம்புவ பொலிஸார் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இளைஞன் தற்பொழுது பொலிஸில் சரணடைந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.