ஸ்ரீ ல.சு.க. யின் புதிய தொகுதி அமைப்பாளர்கள் 2 ஆம் திகதிக்கு முன் நியமனம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இடைவெளி ஏற்பட்டுள்ள சகல தொகுதிகளுக்குமான புதிய அமைப்பாளர்கள் எதிர்வரும் 2 ஆம் திகதிக்கு முன்னர் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழுவின் தீர்மானத்தை செயற்படுத்தாத சகல தொகுதி அமைப்பாளர்களும் தங்களது பதவிகளை இழக்க நேரிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சியின் சவால்களுக்கு முகம்கொடுக்கத் தெரிந்த, கட்சிக்காக கடுமையாக உழைத்த கட்சி உறுப்பினர்கள் புதிய தொகுதி அமைப்பாளர்களாக தெரிவு செய்யப்படுவர் எனவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.