குருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள 2 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்


குருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதே பகுதியிலுள்ள தைக்கா பள்ளிவாசல் மீதும் நேற்று நள்ளிரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலில் பள்ளிவாசல்களின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நாரம்மல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.