ரணிலுக்காக நாளை சபையில் 2 மணி நேர விவாதம்


பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 40 வருட பாராளுமன்ற வாழ்வுக்கு வாழ்த்துக் கூறும் வகையிலான விவாதமொன்று நாளை (04) பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விவாதத்தில் அரசாங்கத்துடன் ஒட்டியுள்ள சகல கட்சித் தலைவர்களும் கருத்துத் தெரிவிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்நிகழ்வு நாளை காலை 10.30 மணிக்கு முன்னாள் சபைத் தலைவரும் தற்போதைய சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வாவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
2 மணி நேரம் நடைபெறவுள்ள இவ்விவாதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் கருத்துத் தெரிவிக்கவுள்ளனர்.
ஐ.தே.க.யின் சகல உறுப்பினர்களும் சபையில் உரையாற்றுவதற்கு அவகாசம் கோரியுள்ள போதிலும், அமைச்சர்கள், சிரேஷ்ட உறுப்பினர்கள் ஆகியோருக்கு மாத்திரமே காலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக சபைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.