இதுவரையும் டெங்கு காய்ச்சலால் மரணித்தவர்கள் தொகை 360


வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 145,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு ஒழிப்பிற்காக ஏற்கனவே சுகாதார அமைச்சினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் ஒரு விசேட குழுவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் , குருநாகல் மாவட்டம், புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட செயற்றிட்டம் நாளையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...