37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை கைது


சுமார் 37 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பேங்கொக் நோக்கி பயணிக்கும் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க பிரிவு தெரிவித்துள்ளது.
பயணப்பொதியின் கைப்பிடியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 376 கிராம் ஹெரோயின் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.