Aug 28, 2017

கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் ஏறாவூரில் 40 இலட்சத்தில் இரண்டு வீதிகள் கொங்கிறீட் வீதிகளாக அபிவிருத்தி



ஏறாவூரின் மிச் நகர் பிரதான வீதி மற்றும் மிச் நகர் வடிகான் வீதி ஆகியவற்றை  கொங்கிறீட் வீதிகளாக  நிர்மாணிப்பதற்கு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நிதியொதுக்கீட்டிற்கமைய  40 இலட்சம் ரூபா செலவில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று முன்தினம் மாலை (26.08.2017)இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்,

ஏறாவூர் மிச் நகர் பகுதி அபிவிருத்திச் செயற்பாடுகளில் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மைக்காலமாக கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் வடிகான் கட்டமைப்பு,வீதிப் புனரமைப்பு என பல்வேறு  அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு அங்கமாகவே மிச் நகர் பிரதான வீதி மற்றும் வடிகான் வீதி ஆகியவற்றுக்கு கொங்கிறீட் இடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது,

 

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network