கிழக்கு முதலமைச்சரின் முயற்சியால் பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லை 45 ஆக மாற்றம்


கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் நீண்டகால முயற்சியினால் கிழக்கு மாகாண பட்டதாரிகளை உள்ளீர்க்கும் வயதெல்லையை  45 ஆக மாற்றப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித    பொகொல்லாகம ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பையடுத்து இந்த வாரத்துக்குள் அதற்கான தீர்வு முன்வைக்கப்படும் என்று அறிவிக்கப்படும் என்ற நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது,

இதனடிப்படையில்  தற்போது  கிழக்கு மாகாண சபையினால்  ஆசிரியர்வெற்றிடங்களை நிரப்ப கோரப்பட்டிருக்கும்   வெற்றிடங்களுக்கு 45 வயதான பட்டதாரிகளும் விண்ணப்பிக்க தகுதிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது,

இதன் மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தம்  மூலம் பலர்  தமது  குறித்த வயதுக் காலப்பகுதியில் பட்ட்டப்படிப்பை பூர்த்திசெய்வதில் பல்வேறு  தடங்கல்களை எதிர்நோக்கியிருந்தனர்,

இந்த நிலையில்  நியமன வயதுப்  பிரச்சினை குறித்து  பட்டதாரிகள் முதலமைச்சரிடம்  முறையிட்டிருந்த நிலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பல தடவைகள் இது தொடர்பில் பல்வேறு  முயற்சிகளை முன்னெடுத்திருந்தார்,

இந்நிலையிலேயே இனி வரும் காலங்களில் கிழக்கு மாகாண பட்டதாரிகளின் நியமன வயதெல்லை 45 ஆக மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியின் பயனாக கிழக்கில் உள்ள 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளுக்கான தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன,

இதன் முதற்கட்டமாக 1700 பட்டதாரிகளை உள்வாங்குவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கான நியமனங்களும் விரைவில் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.