47 குற்றச்சாட்டுகள் அவன்ட் கார்ட் நிறுவன தலைவர்கள் மீது


ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் முன்னாள் தலைவரான மேஜர் ஜெனரல் பாலித பெர்னான்டோமற்றும் அவன்ட் கார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மேஜர் நிசங்க சேனாதிபதி ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இவர்கள் இருவருக்கும்
 எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் 47 குற்றச்சாட்டுகளை முன்வைத்து வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மகிந்த ஆட்சிக்காலத்தில்பாதுகாப்புச் செயலராக இருந்த கோத்தாபயவின் உதவியுடன் ரக்ன லங்கா பாதுகாப்பு சேவை நிறுவனம்மற்றும் அவன்ட் கார்ட் நிறுவனம் என்பன உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.