கிளிநொச்சியில் இராணுவத்தினரை தாக்கிய 6 பேர் கைது


கிளிநொச்சி ஊற்றுப்புலத்தை சேர்ந்த இரண்டு தமிழ் இராணுவத்தினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த தாக்குதல் சம்பவம் நேற்று இரவு இடம்பெற்ற அதேவேளை, சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட இராணுவத்தினர் கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.