சைட்டம் கல்லூரிக்கு மாணவர்கள் அனுமதிப்பதை நிறுத்த வேண்டும் – 8 பீடாதிபதிகள் கோரிக்கை


மாலபே சைட்டம் தனியர் மருத்துவ கல்லூரிக்கு மாணவர்கள் அனுமதிப்பதை நிறுத்துமாறு கோரி எட்டு அரச பல்கலைக்கழக வைத்திய பீட, பீடாதிபதிகள், 4 பரிந்துரைகளை கொண்ட கடிதம் ஒன்றை உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவிற்கு அனுப்பியுள்ளனர்.
இப்பரிந்துரைகள் மூலம் சைடம் தனியார் பல்கலைகழக பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியும் என்றும், அதனூடாக மருத்துவபீட மாணவர்களின் வகுப்பு பகிஷ்கரிப்பை நிறுத்த முடியும் என்றும் தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, இப்பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இந்தப் பிரச்சினை மேலும் நீண்டு செல்வதை தடுக்க முடியும் எனவும் குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி கடிதத்தை கொழும்பு, பேராதனை, களனி, ஜயவர்தனபுர, ருஹுனு, யாழ்ப்பாணம், ராஜரட்ட மற்றும் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதிகளே அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...