பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் முயற்சியினால் காத்தான்குடி சுகாதார பொதுப்பரிசோதக நிலைய கட்டத்திற்கு 88 இலட்சம் நிதி ஒதுக்கீடு


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் வேண்டுகோளின் பேரில் கிழக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி சுகாதார பொதுப்பரிசோதக நிலைய கட்டத்திற்கான மேல்த்தள வேலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கென கிழக்கு மாகாண சபையின் சுகாதார அமைச்சின் ஊடக சுமார் 88 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு விரைவில் இவ் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதனூடாக காத்தான்குடி பொது சுகாதார வைத்திய நிலையத்தின் பணிகளை மேலும் விஸ்தரிக்கவும், வினைத்திறனான சேவையினை மக்களுக்கு வழங்கவும் முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இன்று காலை காத்தான்குடி சுகாதார பொதுப்பரிசோதக நிலையத்திற்கு விஜயமொன்றினை மேற்கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் நிர்மாணிக்கப்படவுள்ள கட்டட மேல் தளத்தினை பார்வையிட்டதோடு பொது சுகாதார வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் நசுருதீன் அவர்களை சந்தித்து மேற்கொள்ளப்படவுள்ள இவ் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வைத்திய நிலையத்தின் மேலதிக தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.
எம்.ரீ. ஹைதர் அலி