மறைந்திருக்கும்- தயாசிறி ஜெயசேகர


மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவாகியிருக்காவிட்டால் அமைச்சர் ரவியின் திறைசேரி முறி மோசடி அம்பலமாகியிருக்குமா என்பது சந்தேகமே எனவும் இந்த மோசடியுடன் தொடர்புள்ள சகலரையும் தராதரம் பாராது தண்டிக்க வேண்டும் எனவும் விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.
தனக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தமது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திறைசேரி முறி மோசடியினால் 12 ஆயிரம் மில்லியன் ரூபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சில மாதங்களிலே இந்த பாரிய மோசடி நடந்துள்ளது.
ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு கடந்த வாரம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் அதில் ஆஜராகவில்லை. மீண்டும்  நாளை (02) ஆஜராக வேண்டும் என அவர் பணிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.