ஹம்பாந்தோட்டையும் சங்ரி லா வும் ஒன்றல்ல


ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடக்கம் ஒவ்வொரு அரச வளத்தையும் விற்று வரும் இந்த அரசாங்கம் இறுதியில் முழு நாட்டையும் விற்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கல்கிஸ்சையில் அமரபுர பீட பிரதம தேரர் தம்மவாசவின் ஆசிர்வாதம் பெறுவதற்காக சென்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு விற்றபின்னர் அதனை நியாயப்படுத்த அரசாங்கம் முயல்கிறது.சங்ரி லா ஹோட்டல் அமைக்க அரச காணியை வழங்கியதாக எம்மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.
சங்ரி லா வுக்கு வழங்கியதும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கியதும் ஒன்றாக முடியுமா? பாரிய நிலப்பரப்புடன் துறைமுகம் விற்கப்பட்டுள்ளது. சங்ரி லா ஹோட்டலுக்கு காணி வழங்கியதால் நாட்டின் பாதுகாப்புக்கு பிரச்சினை ஏற்படுமா? ஹோட்டலுக்காக காணி வழங்கியதால் தான் முதலீடுகள் அதிகரித்தன. அரச காணி உரித்தை வெளிநாட்டவர்களுக்கு வழங்குவதை தடுக்கும் சட்டத்தை நாம் தான் கொண்டு வந்தோம்.
ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்ட ஒப்பந்தமன்றி வேறு ஒப்பந்தமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. மக்கள் நீதிமன்றத்தில் இந்த அநியாயங்களுக்கு தீர்ப்பு கிடைக்கும் என்றார்.