அந்-நூர் மற்றும் அல்-அர்ஹம் வித்தியாலயங்களுக்கு கணணிகள் மற்றும் தளபாடங்கள் வழங்கிவைப்பு


(எம்.ஜே.எம்.சஜீத்)

தேசிய ஒருமைப்பாட்டிற்கும், நல்லிணக்கத்திற்குமான பணிமனையினால் முன்னனெடுக்கப்பட்டு வரும் பொருளாதார ஈடுபாட்டு வேலைத்திட்டம் மற்றும் ஜீவனோபாய உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக அட்டாளைச்சேனை அந்-நூர் மற்றும் அல்-அர்ஹம் வித்தியாலயங்களுக்கு கணணிகள் மற்றும் தளபாடங்கள் என்பன வழங்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பையின் சிபாரிசின் பேரிலே மேற்குறித்த பாடசாலைகளுக்கு குறித்த பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த பாடசாலைகளில் உள்ள கணணி ஆய்வு கூடத்தினை விருத்தி செய்யும் நோக்குடனே மேற்படி திட்டத்தினூடாக கணணிகள் மற்றும் தளபாடங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி கணணி மற்றும் தளபாடங்களை அட்டாளைச்சேனை அந்-நூர் மற்றும் அல்-அர்ஹம் வித்தியாலயங்களுக்கு கையளிக்கும் நிகழ்வு அண்மையில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இதன்போது அட்டாளைச்சேனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ் பொருட்களை பாடசாலை அதிபர்களிடம் கையளித்தார். 

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து வருகை தந்த உயர் அதிகாரிகள், அம்பாரை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் ,மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.