பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது


யாழ். கோப்பாய் பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இரு பொலிஸார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நல்லூர் பகுதியை சேர்ந்த சிவராசா மதுசன் (20) மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்த விஜயரத்னம் சிவராஜா (23) ஆகிய நபர்களே சந்தேகத்தின் பேரில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.