முஸ்லிம் மாணவிகள் அரச பரீட்சைகளில் முகம் மூடுவது தடை

கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் எந்தவொரு முஸ்லிம் மாணவியும் முகத்தை மூடும் விதமாக ஆடையணிந்து பரீட்சைக்கு ஆஜராக முடியாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சில பரீட்சார்த்திகள் முகத்தை மூடிக் கொண்டு பரீட்சைக்குத் தோற்றுவதனால், காதுகளில் சிறிய ரக மைக்ரோ போன்கள், நுண்ணிய நவீன ரக உபகரங்கள் என்பவற்றை மறைத்து வைத்து பரீட்சை எழுதப் பயன்படுத்தும் சாத்தியப்பாடுகள் உள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முகத்தை மூடிக் கொண்டு ஆள் மாறாட்டம் செய்து பரீட்சை எழுதவும் வாய்ப்புக்கள் உள்ளன. இந்த விடயங்கள் அனைத்தையும் கடந்த கால சம்பவங்களையும் கருத்தில் கொண்டு இந்த தடை நேற்று ஆரம்பமான உயர்தரப் பரீட்சையிலிருந்து அமுலுக்கு வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
Powered by Blogger.