Home » » சாய்ந்தமருது வறிய குடும்பங்களுக்கு பிரதி அமைச்சர் ஹரீசினால் வாழ்வாதார உதவி

சாய்ந்தமருது வறிய குடும்பங்களுக்கு பிரதி அமைச்சர் ஹரீசினால் வாழ்வாதார உதவி



சாய்ந்தமருது பிரதேச செயலகத்திற்குட்பட்ட வறிய குடும்பங்களுக்கு கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கமைவாக வாழ்வாதார உதவி வழங்கும் முதற்கட்ட நிகழ்வு இன்று (4) வெள்ளிக்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா தலைமையில் நடைபெற்றது. 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவசர வேலை நிமிர்த்தம் கொழும்பு சென்றபோதிலும் குறித்த நிகழ்வு திட்டமிடப்பட்ட வகையில் முதற்கட்டமாக நடைபெற்றது. 

இதன்போது வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு சுய தொழிலை மேற்கொள்வதற்கு ஏதுவாக கோழி வளர்ப்பிற்கான கோழிக்குஞ்சு, கோழித்தீன் உள்ளிட்ட கோழி வளர்ப்பு உபகரணங்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவாவினால் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் அடுத்த வாரமளவில் நடைபெற ஏற்பாடாகியுள்ள இரண்டாம் கட்ட நிகழ்வின்போது வேறுபட்ட சுயதொழிலை மேற்கொள்வதற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்படவுள்ளது. 

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர், கணக்காளர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கால்நடை வைத்திய அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.  




(அகமட் எஸ். முகைடீன்)