இராஜினாமா செய்யுமாறு- ஜனாதிபதி அமைச்சர் ரவியிடம் வேண்டுகோள்


இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் முறி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றம்சாட்டப்படும் முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்கவுக்கு தனது பதவியை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளன.
அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் அமைச்சரவையில் பணியாற்றுவது அரசாங்கத்துக்கும் ரவிகருணாநாயக்கவுக்கும் சிக்கலானதாகும் எனவும் ஜனாதிபதி அவருக்கு அறிவிப்புச் செய்துள்ளார்.
இதனால், அவர் முன்னால் உள்ள சிறந்த தீர்வு பதவியை இராஜினாமா செய்வதே ஆகும் எனவும் ஜனாதிபதி ரவி கருணாநாயக்கவுக்கு அறிவித்துள்ளதாகவும் உயர் மட்ட தகவல்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.