நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர்கள் பதவியேற்புநீதி அமைச்சராக,  வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரரளவும், புத்தசாசன அமைச்சராக, வலுவான அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெபேராவும் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றுக்கொண்டனர்.
இவர்கள், ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று (25) சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டனர்.
நீதி மற்றும் புத்தசாசன அமைச்சராக இருந்த விஜேதாஸ ராஜபக்ஷ பதவிநீக்கம் செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திகே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.