முஸ்லிம்கள் இல்லையேல் மரணித்திருப்போம்: மீட்கப்பட்ட துறவிகள்!


அபூஸாலி முஹம்மத் சுல்பிகார்

முஸ்லிம்கள் இல்லையென்றால் நாங்கள் இறந்திருப்போம் என்கின்றனர் உ.பி.ரெயில் விபத்தில் சிக்கிய பக்தர்கள்.

இந்தியா உத்தர பிரதேசத்தில் பூரியில் இருந்து ஹரித்வார் மற்றும் கலிங்கா செல்லும் உத்கல் எக்ஸ்பிரெஸ் ரெயில் முசாபர்நகரின் கட்டாலி என்ற பகுதியில் தடம் புரண்டது. இதில் ரெயிலின் 14 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 23 பேர் பலியானார்கள் 40 பேர் படு காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கங்கையில் புனித நீராட சென்ற துறவிகள் 7 பேர் இந்த விபத்தில் சிக்கி தவித்தனர். அவர்களை விபத்து நடந்த பகுதி முஸ்லிம்கள் காப்பாற்றியுள்ளனர். இதுகுறித்து துறவிகளில் ஒருவரான பகவான் தாஸ் மஹராஜ் தெரிவிக்கையில் " என்ன நடந்ததென்றே தெரியவில்லை. நாங்கள் வலியில் துடித்தோம். எங்களை மட்டும் அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் மட்டும் காப்பாற்றவில்லை என்றால் நாங்கள் அனைவரும் உயிரிழந்திருப்போம்" என்றார்.