நுவரெலியா கந்தபளையில் கைகுண்டு மீட்பு


(க.கிஷாந்தன்)

நுவரெலியா கந்தபளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தபளை நகர பிரதான குப்பை மேடு அமைந்திருக்கும் கந்தபளை இராகலை பிரதான வீதிக்கு அருகில் 10.08.2017 அன்று மாலை கைகுண்டு ஒன்று கந்தபளை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த இந்த பிரதான வீதியில் சென்ற பாதசாரி ஒருவர் கந்தபளை பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த கந்தபளை பொலிஸார் கைகுண்டை கண்டுபிடித்துள்ளனர்.

இதனையடுத்து நுவரெலியா பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் தெரிவித்த கந்தபளை பொலிஸார் இக்கைகுண்டினை மீட்பதற்கு இராணுவத்தின் குண்டு செயழிலக்கும் பிரிவின் உதவியை நாடியுள்ளனர் என கந்தபளை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை மாலை 7.45 மணியளவில் கந்தபளை பகுதிக்கு விரைந்த குண்டு செயழிலக்கும் பிரிவு இக்கைகுண்டினை மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பிரிவினரும் கந்தபளை பொலிஸாரும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.