வில்பத்துவில் கட்டுப்பாடு


வில்பத்து, தேசிய பூங்காவுக்குள் சுற்றுலாப் பயணிகளை அனுமதித்தல் மற்றும் நேரம் ஆகியனவற்றுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. 
இன்று (02) முதல் நடைமுறைப்படுத்தப்படும் இந்த கட்டுப்பாட்டின் பிரகாரம், காலை 6 மணிமுதல் முற்பகல் 11:30 மணி வரைக்கும் மட்டுமே, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.  
நிலவுகின்ற கடுமையான வரட்சி காரணமாகவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வனஜீவராசிகள் மற்று நிலையான அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.  
இதேவேளை, இந்த காலப்பகுதிக்குள் சுற்றுலாப்பயணிகள் 30 பேர் மட்டுமே தேசிய பூங்காவுக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது.