அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

Share This
எஸ்.எம்.சன்சிர்

 அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் முறையிட்டும் தீர்வு கிட்டவில்லை இது விடயமாக  அம்பாறை மாவட்ட கரும்பு செய்கையாளர் சங்கம் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் தேசிய காங்கிரஸின் கிழக்குமாகான அமைப்பாளரும் பொறியியளாளருமான அல்.ஹாஜ் எஸ்.ஜ.மன்சூர் அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

 இப் பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் ஆராயப்பட்டு சில பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டபோதும் மீதமுள்ள பிரச்சினை தொடர்பாக இவரால் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட பிரச்சினைகளான கரும்பு செய்கையாளர்கள் காப்புறுதி செய்யப்பட வேண்டும். 

அதாவது வெள்ளம் வரட்சி, காட்டு மிருகங்களின் தொல்லை, தீ போன்ற அனர்த்தங்களினால் கரும்பு செய்கை பாதிக்கப்படுகின்றன. இதற்காக 1-3 மாதங்களுக்குள் பாதிக்கப்பட்டால் 150000.00, 3-6 மாதங்களுக்குள் 200000.00, 6 மாதங்களுக்கு பின்னர் 250000.00 வழங்கப்பட வேண்டும். என கேட்டுக் கொண்டார். இவ் விடயங்களுக்கு தீர்வு காணுமுகமாக அவரின் வேண்டுகோளை ஏற்று  2017.08.19ம் திகதி அம்பாரை மாவட்ட செயலகத்தில் மாவட்ட செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு சமூகமளித்த Galoya plantation (Ltd )CEO Mr.Gamini Rathnayake ,Hingurana Sugar Industries GM Mr.Ifthikar ,DDA Mr.Kaleej ,DDI Mr.Nimal ,Irakkamam DS Mr.Naseer ,ACAD Mrs.Samini உட்பட பல அதிகாரிகள் பங்குபற்றினர்.

இக் கூட்டத்தில் இறக்காமம் பிரதேச ஒருங்கினைப்பு குழு இணைத்தலைவரால் முன் வைக்கப்பட்ட பிரச்சினைக்கான திர்வுகளை வழங்கியதுடன் மேலும் அறுவடை நடந்து 21 நாட்களுக்குள் இறுதிகொடுப்பனவை வழங்குவதாகவும் கரும்பு செய்கைக்கு தேவையான நீர் பாசன வசதிகளை உரிய காலத்தில் வழங்குவது எனவும் இக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.  இச்செயற்பாடானது அம்பாரை  மாவட்ட கரும்பு செயகையாலருக்கு கிடைக்கப்பட்ட வர பிரசாதமாகும் என விவசாயிகள் நன்றி பாராட்டுகின்றனர்.

சிலோன் முஸ்லிம்  கிழக்கு பிராந்திய காரியாலயம்

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE