குருநாகலிலுள்ள ஜும்மா பள்ளிவாசலொன்றின் மீதும் இன்று மற்றுமொரு தாக்குதல்


குருநாகல் நாரம்மல பொல்கஹயாய பிரதேத்தில் அமைந்துள்ள மஸ்ஜித் அன்னூர் ஜும்மா பள்ளிவாயல் மீது இன்று அதிகாலை கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் பள்ளிவாயல் மீது கல்வீச்சு தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும், பள்ளிவாசலில் தங்கியிருந்தவர்களால் ஒலிபொருக்கி மூலம் அறிவித்தல் விடுக்கப்பட்டமையை தொடர்ந்து ஊர் மக்கள் தாக்குதல் நடத்தியவர்களை பிடிக்க துரத்தியபொழுது அவர்கள் தப்பித்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல் பெந்தெனிகொட பகுதியிலுள்ள ஜும்மா பள்ளிவாசல் மற்றும் அதே பகுதியிலுள்ள தைக்கா பள்ளிவாசல் மீதும் கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு இனந்தெரியாதோரால் தாக்குதல் நடத்தப்பட்டு,  பள்ளிவாசல்களின் ஜன்னல் கண்ணாடிகள் சேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.