ஸ்ரீ ல.சு.க. யின் மத்திய செயற்குழுக்கு ஜனாதிபதி இன்று அவசர அழைப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு  இன்று (10) அவசரமாக கூட்டவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாட்டிலுள்ள முக்கிய விடயங்கள் தொடர்பில் இறுதித் தீர்மானங்களை எடுக்கும் நோக்கில் இன்றைய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பிலான இறுதித் தீர்மானத்தை இன்னும் இரு வாரங்களில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாபா அபேவர்தனவும், ஜனாதிபதியின் தீர்மானத்தை இன்றிரவு அல்லது நாளை ஜனாதிபதி அறிவிப்பார் என ஸ்ரீ ல.சு.க.யின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவும் கூறியிருக்கும் நிலையில், இன்று அவசர கூட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.