Aug 15, 2017

மற்றொரு "ஆவா குழு" உறுப்பினர் கைது..!

வாள் வெட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆவா குழுவின் மற்றுமொரு உறுப்பினர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் கொக்குவில் மேற்குப் பகுதியில் இன்று (15) காலை 19 வயதுடைய ரவீந்திர தரூஷன் எனப்படும் இளைஞர் ஒருவரே விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆவா குழு உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். 
கைது செய்யப்பட்டவர் தற்போது யாழ்.பொலிஸாரிடம் கையளிக்கப்பட்டுள்ளார். 

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post