திருகோணமலை, கிளிவெட்டி ஆயுர்வேத மத்திய மருந்தகம் திறந்து வைப்புகிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சுதேச வைத்திய அமைச்சின் கீழ்  திருகோணமலை சுகாதார பிராந்தியத்தின் கீழ் கிளிவெட்டி, பிரதேசத்தில் அம்மக்களின் தேவையகளை அறிந்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தகத்தினை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (02) இடம்பெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் கலந்துகொண்டு வைத்தியசாலையை மக்களிடம் கையளித்தார். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் துறைரட்ன சிங்கம், கிழக்கு மாகாண சுதேச வைத்திய ஆணையாளர் வைத்தியர் ஸ்ரீதர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உதவிச்செயலாளர்களான ஹுசைனுடீன், ஷியாகுல் ஹஹக், வெருகல பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தயாபரன், உள்ளிட்டவர்களுடன் வைத்திய அதிகாரிகள் பொதுமக்கள் என பலரும் இதன் போது கலந்துகொண்டனர். 05 இலட்சத்திற்கும் மேற்பட்ட மருந்து பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இவ்வைத்தியசாலைக்கான வைத்தியர்களும், தாதியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சிலோன் முஸ்லிம் கிழக்கு பிராந்திய காரியாலயம்.