அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்


 இறக்காமம் முகைடின் மற்றும் ஜபல் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பிரதேச செயலாளர் எம்.எம். நசிர் தலமையில் இன்று காலை 2017.08.01 திகதி இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இன் நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் கிராம  வாசிகள் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இன் நிகழ்வில் பிரதேச செயலாளர் உரையாற்றுகையில் இப்பிரதேச மக்களின் வாழ்வாதார செயற்பாடுகளை எதிர்காலத்தில் எவ்வாறு விருத்தி செய்ய வேண்டும் என்பது  தொடர்பாக மக்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
 ஏ.கே.அஸ்வர்
இறக்காமம் செய்தியாளர்