கொழும்பில் இன்று ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு மாநாடு


வன்முறை மற்றும் தீவிரவாதம் என்பவற்றைத் தடுக்கும் சர்வதேச போக்கு எனும் தலைப்பில் இவ்வருடத்துக்கான கொழும்பு பாதுகாப்பு மாநாடு இன்று (28) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பில் ஆரம்பமாகின்றது.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் சர்வதேச நாடுகளின் பாதுகாப்பு பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் 31 நாடுகளைச் சேர்ந்த 52 பாதுகாப்பு துறை சார்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.