பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் இன்னும் உள்வாங்கப்படவே இல்லை : அநுரகுமார

நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் சட்டப் பிரச்சினை இருக்கக் கூடிய போதிலும், அந்தப் பிரேரணை அனைத்துக்கும் முன்னதாக ஒழுங்குப் பத்திரத்தில் உள்வாங்கப்பட்டிருக்க வேண்டும் என்று, எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி. சுட்டிக்காட்டினார்.
ஒழுங்குப்பத்திரத்தில் உள்வாங்கியதன் பின்னரே, அதை விவாதத்துக்கு எடுக்கலாமா அல்லது முடியாதா என்பது பற்றிய சந்தேகத்தை பேசி தீர்த்துக்கொள்ள முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.   
‘பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் இன்னும் உள்வாங்கப்படவே இல்லை. அதற்கு முன்னதாக எப்படி இதில் சட்டப் பிரச்சினை பற்றி பேச முடியும்’ என்றும் அநுரகுமார எம்.பி வினவினார்.   
குறுக்கிட்ட சபாநாயகர் கரு ஜயசூரிய, சட்டப் பிரச்சினை இருந்தமையினால் அதை செய்யவில்லை என்று தெரிவித்துடன், இந்த நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வியாழக்கிழமை தமது தீர்மானம் அறியத்தரப்படும் என்றும் இதுவே இந்த விடயத்தில் தனது முடிவு என்றும் திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.