இலங்கை வந்துள்ள நோர்வே நிபுணர் குழு உமா ஓயா விஜயம்


ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில் உமா ஓயா திட்டம் தொடர்பில் கண்டறிய நோர்வே விஷேட நிபுணர் குழு ஒன்று இலங்கை வந்துள்ளது.
நேற்றிரவு இலங்கை வந்தடைந்த குறித்த நிபுணர்குழு குழு இன்று உமா ஓயா அபிவிருத்தி திட்டம் தொடர்பாக பார்வையிடச் செல்ல இருப்பதோடு அபிவிருத்தி திட்டத்தால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் பிரதேசங்களை கண்டறியவிருப்பதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இதேவேளை, உமா ஓயா திட்டத்தினால் ஏற்பட்டிருக்கும் சேதம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை குறித்த குழு சமர்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.