நீர்கொழும்பு துப்பாக்கிச் சூடு: நால்வர் கைது

நீர்கொழும்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருண சந்தியில் ஆயுததாரிகளுக்கும் பொலிஸ் அதிரடிப்படையினருக்கும் இடையில் நேற்று (12) இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆயுதம்தாங்கிய குழுவொன்று வாகனத்தில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் ஆயுததாரிகள், விசேட அதிரடிப்படையினரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். பதிலுக்கு அதிரடிப்படையினர் நடத்திய தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

காயடைந்தவர்கள் ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணம் செய்த வேன் மற்றும் டி56 ரக துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.