ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம் – லோட்டஸ் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

தமது பரம்பரை காணி உரிமைகளை கோரி இரணைமடு பிரதேச மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (09) காலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னாலிருந்து ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்த இவர்கள் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முயற்சித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் லோட்டஸ் பாதையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த ஆர்பாட்டக்காரர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடலொன்றுக்கான ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டிருப்பதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.