அமைச்சரவைக் கூட்டத்திற்கு ரவி வரவில்லை !

வெளிவிவகார அமைச்சர் ரவி கருநாணாயக்க ஜனாதிபதி தலைமையில் இன்று இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு சமுகமளிக்கவில்லையென  தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெறும் அமைச்சரவைக் கூட்டத்தின் போது, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் கலந்துரையாடப்படவிருந்த நிலையிலேயே அவர் அங்கு சமுகமளிக்கவில்லையென  தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.