மஹிந்த அணியின் குதூகலம், குறுகிய ஆயுளை கொண்டது - ஜனாதிபதி

ரவி கருணாநாயக்கவின் பதவி விலகல் விடயத்தில் மஹிந்த அணியினர் குதூகலம் அடைந்தாலும் அது குறுகிய ஆயுளை கொண்ட குதூகலம் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி இந்த விடயத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழுக்கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மஹிந்த ஆட்சியில் அவரும் அவருடைய குடும்பத்தினரும் மேற்கொண்ட ஊழல் நடவடிக்கைகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடைந்துள்ளன.
இந்த நிலையில் அடுத்த வாரத்தில் அவர்களுக்கு என்ன நிகழும் என்று பாருங்கள் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.