Aug 16, 2017

யோஷித்த ராஜபக் ஷவிடம் இன்று குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை


முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷவின் பாரியார் ஷிரந்தி ராஜ­ப­க் ஷ­விடம் குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் நேற்று மூன்­றரை மணி நேரம் சிறப்பு விசா­ர­ணை­களை மேற்­கொண்­டனர்.  செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் முன்னாள் முதற் பெண்­மணி ஷிரந்தி ராஜ­ப­க் ஷவின் 'சிரி­லிய சவிய' அமைப்­புக்கு வழங்­கப்­பட்டு 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2015ஆம் ஆண்டு ஜன­வரி 20 ஆம் திகதி வரை அந்த அமைப்பின் கட்­டுப்­பாட்டில் இருந்த (WP) KA-0642 எனும் டிபண்டர் வாகனம் தொடர்பில் இந்த விசா­ர­ணைகள் இடம்­பெற்­றன. 
குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை தொடர்பில் ஏற்­பட்­டுள்ள சந்­தே­கங்­களை முன்­னி­றுத்தி குற்றப் புல­னாய்வுப் பிரிவின்  விசேட விசா­ரணைப் பிரிவு தீவிர விசா­ர­ணை­களை 
முன்­னெ­டுத்­த­தா­கவும், இதன் போது விஷேட வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்த பின்னர் ஷிரந்தி ராஜ­ப­க்ஷவை அங்­கி­ருந்து வெளி­யேறிச் செல்ல அனு­ம­தித்­த­தா­கவும் பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் சட்­டத்­த­ரணி ருவான் குண­சே­கர தெரி­வித்தார். 
இந் நிலையில் இந்த விவ­காரம் தொடர்பில் இன்­றைய தினம் ஷிரந்தி - மஹிந்த தம்­ப­தியின் இரண்­டா­வது புதல்­வ­ரான யோஷித்த ராஜ­ப­க்ஷவை விசா­ரணை செய்ய எதிர்ப்­பார்ப்­ப­தா­கவும், அது தொடர்பில் அவ­ருக்கு அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவான் குண­சே­கர  சுட்­டிக்­காட்­டினார்.
'சிரி­லிய சவிய' அமைப்பின் கீழ் பாவ­னை­யி­லி­ருந்த செஞ்­சி­லுவை சங்­கத்­தினால் வழங்­கப்­பட்ட டிபண்டர் வாகனம் தொடர்பில் பிரத்­தி­யேக விசா­ரணை ஒன்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்­னவின் நேரடி மேற்­பார்­வையில் அதன் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுதத் நாக­ஹ­முல்ல, பிரதிப் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சானி அபே­சே­கர ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் விஷேட விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்சித் முன­சிங்க தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன.
 இந் நிலையில் நேற்று அது தொடர்பில் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த 'சிரி­லிய சவிய' அமைப்பின் பொறுப்­பா­ள­ராக செயற்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜ­பக்ஷ குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்டார்.
 குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அழைப்­புக்கு இணங்க அவர் நேற்று காலை 9.30 மணிக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரானார். தனது இளைய மகன் ரோஹித்த ராஜ­ப­க்ஷவை நிதிக் குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜர் படுத்­திய பின்னர், தனது கணவர்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ, ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி ஜயந்த வீர­சிங்க, மக­னான சட்­டத்­த­ரணி நாமல் ராஜ­பக்ஷ, சட்­டத்­த­ரணி பிரே­மநாத் தொல­வத்த ஆகியோர் சகிதம் ஷிரந்தி ராஜ­பக்ஷ குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கினார்.
ஆதா­ர­வாக ஆர்ப்­பாட்டம்
 இதன் போது குற்றப் புல­னாய்வுப் பிரிவின் தலை­மை­யகம் முன்­பாக ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ரவு தெரி­வித்து நூற்­றுக்­க­ணக்­கான பெண்கள் ஒன்று கூடினர். அவர்கள் ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­வுக்கு ஆத­ர­வான கோஷங்­களை எழுப்பி, ஷிரந்­திக்கு எதி­ரான விசா­ர­ணைகள் அர­சியல் பழி வாழங்கல் என தெரி­வித்­தனர். இதனால் அப்­ப­கு­தியில் பர­ப­ரப்­பான சூழல்  நேற்று முற்­பகல் முதல் பிற்­பகல் 1.30 மணி வரை நில­விய நிலையில், பிர­தே­சத்தின் பாதைகள் பல மூடப்­பட்டு, அவ­சர நிலை­மையை கையா­ளத்­தக்க வகையில் பொலி­ஸாரும் கல­க­ம­டக்கும் பொலி­ஸாரும் ஸ்தலத்தில் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர்.
 இந் நிலையில் அவ­சியம் ஏற்­படும் போது பயன்­ப­டுத்த பொலிஸ் தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் இயந்­தி­ரமும் தயார் நிலையில் வைக்­கப்­பட்­டி­ருந்­தது.
' ஷிரந்தி மெடமை விட்­டு­விட்டு போக மாட்டோம்' எனவும்,  தற்­போ­தைய விகா­ர­ம­ஹா­தே­வி­யான ஷிரந்­தியை பழி வாங்­காதே எனவும் வலி­யு­றுத்தும்  அங்கு கூடி­யி­ருந்தோர் கோஷங்­களை எழுப்­பினர்.
இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான கெஹெ­லிய ரம்­புக்­வெல்ல, ஜீ.எல்.பீரிஸ்., பந்­துல குண­வர்­தன, முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ உள்­ளிட்டோர் குற்றப் புல­னாய்வுப் பிரிவின் முன் ஆஜ­ரா­கி­யி­ருந்­தனர்.
இந் நிலை­யி­லேயே நேற்று முற்­பகல் 9.30 மணி முதல் பிற்­பகல் 1.15 வரை ஷிராந்தி ராஜ­ப­க்ஷ­விடம் விசா­ரணை நடத்­தப்­பட்டு விஷேட வாக்கு மூலம் பதிவு செய்­யப்­பட்­டது.
கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் விசா­ர­ணையில் உள்ள குறித்த டிபண்டர் வாகனம் தொடர்­பி­லான வழக்கில், இதற்கு முன்னர் செஞ்­சி­லுவை சங்க உயர் அதி­கா­ரிகள் பலரை  குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யி­ருந்­தனர். இதன்­போது, குறித்த டிபண்டர் வாகனம் 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 'சிரி­லிய சவிய' எனும் அமைப்­புக்கு வழங்­கப்­பட்­டி­ருந்த நிலையில், அவர்கள் அந்த வாக­னத்தை எதற்கு, எப்­படி பயன்­ப­டுத்­தினர் என்­பது தமக்கு தெரி­யாது என அவர்கள் குறிப்­பிட்­டி­ருந்­தனர்.
 இந்த நிலையில் செஞ்­சி­லுவை சங்­கத்­தினர் வழங்கும் போது இருந்த நிறம் பின்னர் மாற்­றப்­பட்­டுள்­ள­மையைக் கண்­ட­றிந்த குற்றப் புல­னாய்வுப் பிரி­வினர் அதற்­கான கார­ணத்­தையும் கண்­ட­றிய விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.
 இதன் போது, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் மனிதப் படு­கொ­லைகள் தொடர்­பி­லான விசா­ரணை பிரிவு முன்­னெ­டுக்கும் வஸீம் தாஜுதீன் படு கொலை வழக்கு தொடர்­பி­லான விசா­ர­ணை­களில், வஸீம் தாஜு­தீனின் கொலை­யுடன் டிபண்டர் வாகனம் ஒன்று தொடர்­பு­பட்­டுள்­ளமை தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­தன. எனினும் அந்த டிபண்டர் வாகனம் எது என துல்­லி­ய­மாக தெரி­ய­வ­ராத நிலையில், 'சிரி­லிய சவிய' அமைப்பின் கீழ் இருந்த குறித்த டிபண்டர் வாக­னமே அது என பல தரப்­பி­ன­ராலும் சந்­தே­கங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
 குறிப்­பாக  'சிரி­லிய சவிய' டிபண்டர் வாகனம் ஷிரந்­தியின் பாது­காப்பு பிரி­வி­னரால் பயன்­ப­டுத்­தப்­பட்­டமை,  வஸீமின் கொலை தொடர்பில் ஜனா­தி­பதி பாது­காப்பு பிரி­வினர் சிலர் மீது திரும்­பி­யுள்ள அவ­தானம், வஸீமின் கொலையைத் தொடர்ந்து குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை  போன்ற விட­யங்­களை மையப்­ப­டுத்தி இந்த டிபண்டர் வஸீம் தாஜுதீன் கொலை­யுடன் இணைத்து பேசப்­பட்­டது.
 இந் நிலை­யி­லேயே நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு அழைக்­கப்­பட்ட ஷிரந்­தி­யிடம் குறித்த டிபண்டர் வாக­னத்தின் நிறம் மாற்­றப்­பட்­டமை மற்றும் அதன் நோக்கம் உள்­ளிட்ட பல விட­யங்கள் குறித்து தீவிர விசா­ரணை நடாத்­தப்­பட்­ட­தாக குற்றப் புல­னாய்வுப் பிரிவின் உயர் அதி­காரி ஒருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார்.
 ஷிரந்தி ராஜ­ப­க்ஷ­விடம் நேற்று சிறப்பு வாக்கு மூலம் பெறப்பட்டதன் பின்னர், அவசியம் ஏற்படும் பட்சத்தில  மீள் விசாரணைக்கு அழைப்பதாக கூறி அவர் விடுவிக்கப்பட்டதுடன், அவரது வாக்கு மூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொள்ள சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இந் நிலையில் இன்று ஷிரந்தியின் இரண்டாவது மகனும், குறித்த டிபண்டர் வாகனம் தொடர்பில் தகவல் அறிந்தவர் மற்றும் அதனை சிறிது காலம் பயன்படுத்தியவர் எனவும் நம்பப்படும் யோஷித்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE THIS

Author:

If you have any problems or have comments or suggestions for improving our web, please contact ceylonmuslim24@gmail.com we will do our best to assist you | Chief Edito, CeylonMuslim Media Network