Header Ads

ad728
  • Breaking News

    வடமாகாண அமைச்சர் பா. சத்தியலிங்கம் இராஜினாமா


    வடமாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் பதவி விலகுவதாக வடமாகாண முதலமைச்சருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
     
    வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாகவது,
     
    30 வருட யுத்தகாலத்தில் இருந்து மக்களோடு மக்களாக வாழ்ந்தவன் என்ற வகையில் எனது அமைச்சர் பதவிக்கு அப்பாற்பட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் சின்னாபின்னமாக்கப்பட்ட எம் தேசத்தினையும் வளப்படுத்துவதற்கு திறம்பட செயற்பட்டேன்.
     
    மக்களின் தேவைகளை நிறைவேற்றவுதற்கு அமைச்சர் வாரியத்தின் அனுமதியுடன் பல செயற்திட்டங்களை முன்னெடுத்து செயற்பட்டேன்.
     
    துரதிஷ்டவசமாக அமைச்சர்களுக்கு எதிராக முறைப்பாடுகள் செய்யப்பட்டதன் பிரகாரம், விசாரணைக்காக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் விசாரணைக்குட்படுத்தப்பட்டேன். 
     
    எந்தவித குற்றங்களையும் இழைக்காதவனாக இருந்த போதும், தங்கள் மீதும் தங்கள் நீதி தவறாத தீர்ப்பின் மீதும் நம்பிக்கை கொண்டவனாய், மாகாணத்தின் அமைச்சர் வாரிய பிரச்சினையை முதன்மைப்படுத்தவிரும்பாததன் அடிப்படையிலும், அமைச்சர் வாரியத்தில் இருந்து விலக தீர்மானித்துள்ளேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

     

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728