சைட்டம் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று: ஜனாதிபதி உறுதி


மாலபே தனியார் பல்கலைக்கழகம் தொடர்பான அரசாங்கத்தின் இறுதித் தீர்மானத்தை எழுத்து மூலம் இன்று பெற்றுக்கொடுப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 25 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது, ஜனாதிபதியின் சார்பாக இந்த வாக்குறுதி வழங்கப்பட்டதாகச் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமந்த்த ஆனந்த குறிப்பிட்டார்.
அத்துடன், மாலபே தனியர் மருத்துவக் கல்லூரி தொடர்பான விடயத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் எனவும் தாம் எதிர்பார்ப்பதாக்க சமந்த்த ஆனந்த மேலும் குறிப்பிட்டுள்ளார்.