ஜனாதிபதி சட்டத்தரணிகளே நீங்கள் ஆஜராக வேண்டாம்- ரஞ்சன்


மக்கள் சொத்துக்களை கொள்ளையடித்த திருடர்களுக்காக நீதிமன்றில் ஆஜராக வேண்டாம் என ஜனாதிபதி சட்டத்தரணிகளிடம் தான் காலில் விழுந்து கேட்டுக் கொள்கின்றேன் என பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க மீதான நம்பிக்கையில்லாப் பிரேரனை தொடர்பில், ஜோர்தான் சென்றுள்ள  ரஞ்ஜன் ராமநாயக்கவிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
எனது பார்வைக்கு தவறு ஒன்று நிகழ்ந்துள்ளதாகவே தெரிகின்றது. அப்பாவி மக்களின் நிதியை கொள்ளையடித்தவர்களுக்காக ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது என்பதே எனது வேண்டுகோள் ஆகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.