முஸ்லிம்களை அழிக்க தலைமை தாங்கிய கருணா, விசாரணைக்கு வேண்டுகோள் : முதலமைச்சர் நஸீர்

முஸ்லிம் சமூகத்தை அழிக்க தலைமை தாங்கிய கருணா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் கிழக்கில் இனப்படுகொலை செய்து முஸ்லிம் சமூகத்தை அழிக்க கருணா தலைமை தாங்கினார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தற்போது கருணா முஸ்லிம்களைப் பற்றி வெளியிடும் கருத்துக்களின் மூலம் ஒரு விடயம் தெளிவாக புரிகின்றது.