மூன்றாவது டெஸ்டில் இந்திய அணிக்கு புதிய பந்து வீச்சாளர்

இலங்கை அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது போட்டியில் விளையாடுவதற்கு பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இரண்டாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா பந்து வீசிக்கொண்டிருக்கும் போது இலங்கை வீரர் மலிந்த புஷ்பகுமாரவினை நோக்கி முறையற்ற விதத்தில் பந்தை எறிந்திருந்தார். இதன் காரணமாக அவருக்கு ஒரு போட்டிதடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 12ம் திகதி கண்டி பல்லேகலே மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.