தொழிற்சாலையில் தீ விபத்து!


அதுருகிரிய பொலிஸ் பிரிவின் பனாகொட - ஹோமாகம பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

நேற்று இரவு 11.00 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 

எதுஎவ்வாறு இருப்பினும், தீயினால் எவருக்கும் உயிராபத்துக்கள் ஏற்படவில்லை எனவும், இதுவரை ஏற்பட்ட சேதங்கள் குறித்த விபரம் கணக்கிடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுருகிரிய பொலிஸார், பனாகொட இராணுவத்தினர் மற்றும் கொழும்பு தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை அதுருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.