பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform

Post Top Ad

PLACE YOUR ADVERT HERE

பொலிஸ் மா அதிபருக்கு எதிராக சட்ட கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Share This

சர்வதிகாரப் போக்கில் சாதாரண ஊழியர்களை தாக்கும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவிற்கு எதிராகமிகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஹம்பாந்தோட்டை பாராளுமன்றஉறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்தார்.

கல்கிஸ்சை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர பொலிஸ் திணைக்களத்தில் வைத்து இரண்டு பணியாளர்களை சேர்ட்கொலர்களை பிடித்து தாக்கும் காட்சி சமூக வலைத் தளங்களில் பரவியுள்ளதுஇது தொடர்பில் அவருக்குஎதிராக சிறியதொரு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக அறிய முடியவில்லை.

இது போன்ற செயல்களை கூட்டு எதிரணி  செய்திருந்தால் உடனே சட்ட நடவடிக்கைஎடுக்கப்பட்டிருக்கும்.அண்மையில் ஒரு பெண் சிறு பிள்ளை ஒன்றை தாக்கினார் என்ற காணொளி சமூகவலைத்தளங்களில் வெளியாகி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.குறித்த பெண்ணுக்கு சட்டநடவடிக்கை எடுக்க முடியுமாக இருப்பின் ஏன் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது?

குறித்த ஊழியர்கள் இருவரும் சட்ட ரீதியாக குற்றம் புரிந்திருப்பின் அவர்கள் சட்ட ரீதியாகதண்டிக்கப்பட்டிருக்க வேண்டும்.அதனை விடுத்து பொலிஸ் மா அதிபர் சட்டத்தை கையில்எடுத்தமையானது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய செயலல்ல.இவர் பொலிஸ் மா அதிபர் என்றபதவிக்கான பண்பு ரீதியான தகுதியையும் இதனூடாக இழந்துள்ளார்.

இதே விடயம் எமது ஆட்சியில் இடம்பெற்றிருந்தால் இதனை நாமே செய்வித்தது போன்றுவிமர்சித்திருப்பார்கள்எமது ஆட்சியில் இவ்வாறான விடயங்களுக்கு நாம் இடம்கொடுக்காமல் மிகக்கடுமையாக இருந்ததால் எம்மை சர்வதிகாரிகளாக விமர்சித்தார்கள்.தேவையில்லாமல் அப்பாவிகளிடத்தில்அதிகார பலத்தை காட்டுவதே சர்வதிகாரமாகும்.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் தைரியம் இவ்வரசுக்கு இருப்பதாக நான் கருதவில்லை.இச்செயலினூடாக பொலிஸ் மா அதிபர் தனக்கு கீழ் உள்ள ஏனைய அதிகாரிகளுக்கும் தவறான முன்மாதிரியைவழங்கியுள்ளார். 

இவருக்கு வழங்கப்படும் தண்டனை ஏனையோருக்கு பாடமாக அமைய வேண்டும்எனவேபொலிஸ் மாஅதிபர் பூஜித ஜெயசுந்தர குறித்த இரு பணியாளர்களிடம் மன்னிப்பு கேட்பதோடு பொலிஸ் மா அதிபர்பதவியில் இருந்து அகற்றப்படல் வேண்டும்.

Post Bottom Ad

PLACE YOUR ADVERT HERE