நாளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை - இந்தியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டி
நாளை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்படி, இந்தப் போட்டி நடைபெறவுள்ள கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் 1000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.  அத்துடன் , விஷேட சிசிடிவி கெமராக்களும் இதற்காக பொருத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். 


இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான, 3வது ஒருநாள் போட்டி கடந்த 27ம் திகதி நடைபெற்றது. இதில், இந்தியாவின் வெற்றி ஏறத்தாள உறுதி செய்யப்பட்ட நிலையில், போட்டியைக் காண வந்த இரசிகர்கள் சிலர் பிளாஸ்டிக் போத்தல்கள் உள்ளிட்ட பொருட்களை மைதானத்திற்குள் வீசி எரிந்தனர். இதனால் ஏற்பட்ட குழப்பநிலையை அடுத்து, சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்ட போட்டி, பின்னர் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டதும் நடைபெற்றது. இதில், இந்திய அணி இதில் வெற்றி பெற்று 3-0 என தொடரையும் வசப்படுத்தியது (5 போட்டிகள் கொண்ட தொடர்) என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தநிலையில், நாளையதினம் இரு அணிகளுக்கும் இடையிலான 4வது ஒருநாள் போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.