பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மானியம்


சிறுபோக விளைச்சலில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சுமார் 10,000 ரூபா மானியம் பெற்றுக்கொடுப்பதற்கு விவசாய காப்பீட்டு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவுள்ளதாக விவசாய காப்பீட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
விவசாயிகள் அருகிலுள்ள கமநல சேவைகள் மையத்தில் இருந்து இதற்கான விண்ணப்பப்படிவத்தை பெற்று கொள்ள முடியும் என தெரிவி்கப்பட்டுள்ளது.