Home » » பணம் செலுத்தாத யாத்திரிகர்களின் ஹஜ் பயணம் இரத்து செய்யப்படும்

பணம் செலுத்தாத யாத்திரிகர்களின் ஹஜ் பயணம் இரத்து செய்யப்படும்


2017 ஆம் ஆண்­டிற்­கான ஹஜ் ஏற்­பா­டுகள் முழு­மை­யாக பூர்த்­தி­செய்­யப்­பட்­டுள்ள நிலையில் ஒரு சில யாத்­தி­ரி­கர்கள், முக­வர்­க­ளுக்கு பணத்தை செலுத்­தா­தி­ருப்­ப­தனால் அவர்­களின் ஹஜ் பய­ணத்தை ரத்து செய்ய ஹஜ்­குழு தீர்­மா­னித்­தி­ருப்­ப­தாக அரச ஹஜ் குழுவின் தலைவர் கலா­நிதி எம்.ரி. சியாத் தெரி­வித்தார்.

பய­ணத்­துக்­காக பணம் செலுத்­தாத யாத்­தி­ரி­கர்கள் எதிர்­வரும் திங்­கட்­கி­ழ­மைக்கு முன்னர் பணத்தை செலுத்த அவ­காசம் வழங்­கப்­ப­டு­வ­தா­கவும் அவ்­வாறு பணம் செலுத்­தா­விடின் ஏற்­படும் வெற்­றி­டத்­திற்கு ஹஜ் பய­ணத்­திற்­காக காத்­தி­ருப்­போரை அனுப்ப ஏற்­பா­டுகள் செய்­யப்­படும் என்றும் அவர் மேலும் தெரி­வித்தார்.

இது குறித்து அவர்  மேலும் தெரி­விக்­கையில், 

நாளை மறு­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை இலங்­கை­யி­லி­ருந்து முத­லா­வது ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் குழு சவூதி நோக்கி செல்­ல­வுள்­ளது. இந்­நி­லையில், முக­வர்­களால் அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட கோட்­டாக்­க­ளுக்கு அமைய விமான டிக்­கெட்­டுகள் பதிவு செய்­யப்­பட்­டி­ருக்­கி­றது. அத்­துடன், மக்கா, மதீனா மற்றும் அஸீ­ஸி­யா­விலும் தங்­குமி வச­திகள் ஏற்­பா­டு­களும் முக­வர்­களால் பூர்த்தி செய்­யப்­பட்­டுள்­ளது. எனினும் ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் சிலர் பணத்தை செலுத்­தா­மையால் சிக்கல் நிலைமை ஏற்­பட்­டுள்­ள­தாக ஹஜ் முக­வர்­களால் அரச ஹஜ் ஏற்­பாட்­டுக்­கு­ழு­வுக்கு முறைப்­பா­டுகள் கிடைக்­கப்­பெற்­றுள்­ளது. 

இந்­நி­லையில், நாம் அவ்­வாறு பணம் செலுத்­தாத யாத்­தி­ரி­கர்­க­ளுக்கு எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை வரை அவ­காசம் வழங்க தீர்­மா­னித்­தி­ருக்­கிறோம். குறித்த தினத்­திற்கு முன்னர் யாத்­தி­ரி­கர்கள் திங்­கட்­கி­ழ­மைக்கு முன்னர் கட்­டாயம் பணத்தை செலுத்த வேண்டும். அவ்­வாறு யாத்­தி­ரி­கர்­களால் பணம் வழங்­கப்­ப­டா­விடி குறித்த வெற்­றி­டத்­திற்கு ஹஜ் யாத்திரைக்காக பெயர்களை பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் இருப்போரை ஹஜ்ஜுக்கு அனுப்புவதற்கு உடனடியான ஏற்பாடுகளை மேற்கொள்ளும் முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.