நான் மீண்டும் அரசியலுக்கு வரவுள்ளேன்- டாக்டர் நெவில் பிரணாந்து

தான் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்க எதிர்பார்ப்பதாகவும் எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் முன்னணி கட்சியொன்றில் அபேட்சகராக போட்டியிடவுள்ளதாகவும் சைட்டம் மருத்துவ கல்லூரியின் தலைவர் டாக்டர் நெவில் பிரணாந்து தெரிவித்துள்ளார்.
தான் மக்களுக்குச் செய்யும் சேவையின் அடிப்படையில் அரசியலுக்கு வருவதற்கான உரிமை தனக்கு உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல கோடி ரூபா செலவு செய்து அமைக்கப்பட்ட நெவில் பிரணாந்து வைத்தியசாலையை அரசுக்கு நன்கொடையாக வழங்க முன்வந்தேன். இது மக்களுக்கு சேவை செய்வதற்காகவே ஆகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 
Powered by Blogger.