உயிரிழந்த நிலையில் சிறுத்தை குட்டி மீட்பு(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பத்தனை மவுண்ட்வேர்ணன் வீ.பி 3 இலக்க தேயிலை மலையில் சிறுத்தை குட்டி  ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று 10.08.2017 மதியம் இடம்பெற்றதாக தெரிவிக்கபடுகிறது.

இறந்த
 நிலையில் சிறுத்தை கிடப்பதை தொழிலாளர்கள் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுத்தை குட்டியை திம்புள்ள பத்தனை பொலிஸாருக்கு ஒப்படைக்க நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக பிரதேவாசிகள் தெரிவித்தனர்.
Powered by Blogger.