நாட்டின் பல பாகங்களில் இன்று பலத்த காற்றுடன் மழை


நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு இன்று (20) பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
விசேடமாக வட மேல், வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும், நுவரெலிய மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் கடுமையான காற்று வீசலாம் என திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் கரையோரப் பிரதேசங்களிலும் காற்று வீசலாம் எனவும் கூறியுள்ள திணைக்களம், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணம் என்பவற்றிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யலாம் எனவும் அறிவித்துள்ளது.